புதுடில்லி: உலக அளவில் மிகவும் பிரபலமான திரைப்பட விழாக்களில் ஒன்றான, சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 2019 ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்ஷன் தமிழ் படமான ‘கைதி’ (Kaithi) திரையிடப்படவுள்ளது. இந்த விழா டொராண்டோவில் (Toronto) ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெறும்.
இந்த செய்தியால் மிகவும் மகிழ்சியில் உள்ள படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் ட்விட்டரில், “என் முழு குழுவிற்கும் இந்த வெற்றிக்காக ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
Glad to share this :) Big thanx to the entire teamhttps://t.co/WpwWYl2OAK pic.twitter.com/zyBJkQScsv
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2020
கைதி படத்தில், கார்த்தி (Actor Karthi), நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பேனரின் கீழ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இதை தயாரித்துள்ளனர். விவேகானந்த பிக்சர்ஸ் என்ற பேனரின் கீழ் திருப்பூர் விவேக் இதை இணைந்து தயாரித்துள்ளார்.
சாம் சி.எஸ் பாடல்களின் இசை மற்றும் பின்னணி இசையை வழங்கியுள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவை பதிவை சத்யன் சூரியன் கையாண்டுள்ளார்.
மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. தன் மகளை நாடி ஒரு தந்தையின் பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமான வகையில் இயக்குனர் இப்படத்தில் கூறியுள்ளார். சலிப்பு தட்டாத வகையில் அமைந்துள்ள திரைக் கதையும், அசத்தும் பின்னணி இசையும், அளவான நடிப்பும், அற்புதமான ஒளிப்பதிவும், எதிர் பாரா திருப்பங்களும் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகும்.
ALSO READ: ஏழை மாணவிக்கு ஐ-போன் அனுப்பிய பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு..!
வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குனர் லாவகமாக விளையாடியுள்ள இப்படம் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.
தற்போது, சர்வதேச திரைப்பட விழாவில் இதற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் ‘கைதி படத்தின் பெருமைகளை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.
ALSO READ: நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது கர்ணன் TitleLook!