விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Whistle Podu Song Reactions: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் The Greatest Of All Time திரைப்படத்தின் விசில் போடு பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2024, 07:42 PM IST
  • நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார்.
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை கணக்கிட்டு தற்போது அரசியலில் குதித்துள்ளார்.
  • நடிகர் விஜய் மீது அரசியல் களத்திலும் பெரும் கவனம் உள்ளது.
விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் title=

Actor Vijay GOAT Movie Whistle Podu Song Reactions: நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'The Greatest Of All Time'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு பின் அவரின் 69ஆவது திரைப்படத்தில் நடித்து, சினிமாவுக்கு நடிகர் விஜய் முழுக்கு போட உள்ளார். 

அதாவது, கடந்த பிப். 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். கட்சியை பதிவு செய்ததை தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் அப்போது நடிகர் விஜய் வெளியிட்டார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இந்த கட்சி தொடங்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு முழு வீச்சில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

முழு வீச்சில் கட்சிப்பணி

குறிப்பாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தனது கட்சி செயல்படும் என்றும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கில் அதில் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?

நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் சூழலில், அவரின்  The Greatest Of All Time திரைப்படம் வரும் செப். 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான Whistle Podu இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா இசையில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவான அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. 

இந்த பாடலை முதலில் கேட்கும்போது சுமாராக இருப்பதாகவே தோன்றுகிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த முறையிலான பாடல்கள் செட் ஆகாது என நேற்றில் இருந்தே பேச்சுகள் வந்த நிலையில் இந்த பாடல் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது எனலாம். குறிப்பாக, இன்று சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் லீக் போட்டி நடைபெறும் சூழலில் இந்த பாடலை அப்படக்குழு வெளியிட்டிருந்தாலும், இது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு துதிபாடும் பாடலாகவே அமைந்துள்ளது.

பாடலின் தொடக்கத்திலேயே, 'ஹே... பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா, கேம்பைனா தான் தோறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா' என வரிகள் வந்ததும் அவரின் தொண்டர்கள் நிச்சயம் குதூகலத்தில் குதிப்பார்கள் எனலாம். இப்படி பாடல் முழுவதும் தனது அரசியல் கட்சி குறித்து பல இடங்களில் வரிகளை தூவி உள்ளார், ரஜினிக்கு எப்படி வைரமுத்து பாடல்களை எழுதினாரோ அதேபோல் விஜய்க்கு எழுத வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கியின் முயன்றுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அதில் பெரியளவில் ஈர்க்கவில்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்.

லாஸ்ட்டு சொட்டு உள்ள வர, நம்ம பார்ட்டி ஓயாது என்ற சில வரிகள் ஓகே ரகம் என ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர். ஆனால் பெரும்பாலனோர் கூறுவது என்னவென்றால் விஜய் ரசிகர்களுக்கும் சரி, அரசியல் ரீதியாக விஜய் தொண்டர்களுக்கும் சரி முழு விருந்தாக இல்லாமல் அரைகுறையாக ஏதோ ஒன்று வந்திருக்கிறது என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பாடலின் கடைசி சில நிமிடங்களில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோர் நடனம் ஆடும் ஒன்றுதான் இந்த பாடலில் ஆறுதல் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், வழக்கம்போல் விஜயை பார்த்தாலே போதும் என்ற அவரின் ரசிகர்கள் பாட்டை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News