AK61-ல் இரட்டை வேடங்களில் நடிக்கின்றாரா அஜித்? உண்மை என்ன

'ஏகே61' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அஜித் பிறந்தநாளன்று வெளியிடப்பட உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2022, 01:37 PM IST
  • ஏகே61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
  • நாளை அஜித் பிறந்தநாளை ஒட்டி பர்ஸ்ட் லுக் வெளியிட வாய்ப்பு.
  • அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.
AK61-ல் இரட்டை வேடங்களில் நடிக்கின்றாரா அஜித்? உண்மை என்ன title=

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' போன்ற திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'ஏகே61'. வலிமை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த இரண்டு படங்களும் சமூக கருத்தை கூறும் விதமாக அமைந்திருந்தது, அதேபோல இந்த படத்திலும் ஏதேனும் சமூக கருத்து இடம்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இந்த த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட வங்கி செட்டில் நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க | இரண்டு பிலாப் படங்களில் இருந்து தப்பித்த சூப்பர் ஸ்டார்!

வாலி படத்தில் நடித்தது போல இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒன்று கதாநாயகனாகவும், மற்றொன்று வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.  'ஏகே61' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஹெச்.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார், மேலும் தபு மற்றொரு நடிகையாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இப்படத்திற்காக அஜித் 60 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.  

அஜித் பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, ஏகே61 படத்தின் அப்டேட் மேலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தும்.  சமீபத்தில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெட்ரா போதிலும், அஜித் ரசிகர்களுக்கு அந்த படம் பிடித்துப்போனது.  வலிமை படத்தின் அப்டேட்டுகளை கேட்டு நச்சரித்து கொண்டு இருந்த ரசிகர்கள் இனிமேல் ஏகே61 படத்தின் அப்டேட்டுகளை இனி கேட்டுகொண்டு இருக்கப்போகின்றனர்.

மேலும் படிக்க | AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News