தள்ளிப் போகிறதா விஜய்யின் பீஸ்ட்?

அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2021, 10:25 AM IST
தள்ளிப் போகிறதா விஜய்யின் பீஸ்ட்?  title=

கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வெளிவராமல் இருந்த அனைத்து படங்களும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது.  தற்போது வாரத்திற்கு மூன்று படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளனர்.  இதனால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியும் தள்ளிப்போகிறது, பாதி படங்கள் ஓடிடியில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.   இந்நிலையில் பெரிய நடிகர்களின் படங்களும் சரியான ரிலீஸ் தேதி அமையாமல் இருக்கின்றன.  சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடியா? திரையரங்கமா? என்ற மிகப்பெரிய கேள்விக்கு மத்தியில் அடுத்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 

doctor

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்பில் உள்ள திரைப்படம் வலிமை.  நீண்ட மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  வலிமை திரைப்படம் 2022 ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.   முன்னதாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துடன் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பொங்கலுக்கு தள்ளிப்போகிறது வலிமை.  அதே பொங்கல் தினத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகிறது.  இதனால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

valimai

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இத்திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்ற பேச்சுவார்த்தையில் இருந்து வந்தது.   விஜய் மற்றும் சூர்யா என இருவரது படங்களில் தயாரிப்பாளரும் ஒரே நிறுவனம் என்பதால் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டிற்கு வெளியாகும் என்றும் சூர்யாவின் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.  அதேசமயம் ராஜமௌலியின் RRR திரைப்படம் பொங்கல் தினத்தில் pan-india திரைப்படமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.  கண்டிப்பாக வலிமை படத்துடன் மற்றொரு உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாக உள்ளது. அது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அல்லது விஜய் பீஸ்டா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  மேலும், அண்ணாத்த திரைப்படமும் தீபாவளி தினத்தில் வெளிவராமல் தள்ளி போகலாம் என்று பேச்சு வார்த்தை  நடைபெற்று வருவதாக  கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News