வாரிசுக்கு போட்டியாக தமன் போட்ட பாடல் - இணையத்தில் ஹிட்!

வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ள பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2022, 09:01 PM IST
  • வாரிசு, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் தமன் இசையமைத்துள்ளார்.
  • வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக தற்போது பிரச்சனை நிலவுகிறது.
  • வாரிசு, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.
வாரிசுக்கு போட்டியாக தமன் போட்ட பாடல் - இணையத்தில் ஹிட்! title=

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா - இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா...' எனத்தொடங்கும் முதல் பாடல் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் எஸ்.எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல் ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம் என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க | பேச்சிலர் பார்ட்டிக்காக கிரீஸ் பறந்த ஹன்சிகா! தோழிகளுடன் கும்மாளம் - வீடியோ

'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், 'ஜெய் பாலையா', ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. மேலும் இந்தப் பாடல் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து திரையிசை பிரியர்களுக்கும் பிடித்த பாடலாக நீண்ட காலத்திற்கு இசைபாடல்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பாடலை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிகிறது. 

நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதி இருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராம் - லக்ஷ்மன் இருவரும் இணைந்து சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். 

மாஸ் என்டர்டெய்னர் ஆக்சன் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சந்து ரவிபதி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

சங்கராந்தி அன்று வெளியீடு

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 

சங்கராந்தி அன்று நேரடி தெலுங்கு படங்களுக்குதான் முக்கியத்துவம் எனக்கூறப்பட்ட நிலையில், தமிழ், தெலுங்கில் உருவான விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படத்திற்கு தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற பாடலும் 'சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது. வாரிசு படத்திற்கும் எஸ்.எஸ். தமன் தான் இசையமைத்துள்ளார். 

மேலும் படிக்க | நடிகையுடன் வெளிநாட்டில் டேட்டிங்! செம ஹேப்பியில் நாக சைதன்யா - அப்செட்டில் சமந்தா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News