காலா திரைப்படம் ஒரு ”பிளாக் பஸ்டர்” தனுஷ் ட்விட்!

காலா பற்றி தனுஷ் தன்னுடைய ட்விட்டர் இது ஒரு ”பிளாக் பஸ்டர்” திரைப்படம் என்று பதிவு செய்திருக்கிறார்!

Last Updated : Jun 9, 2018, 01:34 PM IST
காலா திரைப்படம் ஒரு ”பிளாக் பஸ்டர்” தனுஷ் ட்விட்!

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடிகொண்டிருகிறது. 

இருப்பினும் வழக்கமான ரஜினி படத்திற்கான வரவேற்பு காலாவிற்கு இல்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

தூத்துக்குடி பிரச்சனையில் ரஜினி, மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தது தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு புறம் செய்திகள் பரவி வருகின்றனர். அதே சமயம் ரஞ்சித் இந்த திரைப்படத்தை பாராட்டும் படியாக எடுத்திருகிறார் என்றும் விமர்சங்கல் கூறப்படுகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது,,!

கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்ய உதவிய கர்நாடக போலீசாருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தங்கள் நலம் விரும்பிகளுக்கும், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காலா திரைப்படம் ஒரு ”பிளாக் பஸ்டர்” என பதிவு செய்திருக்கிறார்.

More Stories

Trending News