‘காலா’ அறிமுக பாடல் இணையதளத்தில் லீக்- வீடியோ

Last Updated : Jun 2, 2017, 11:16 AM IST
‘காலா’ அறிமுக பாடல் இணையதளத்தில் லீக்- வீடியோ  title=

கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 

இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி, நானா படேகர் உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. 

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் 1 நிமிட வீடியோ தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர்தான் இப்பாடல் காட்சியை படம்பிடித்து இணையதளத்தில் லீக் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

 

 

Trending News