வெப் தொடரில் களமிறங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்

பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் நிறுவனத்துடன் இணைந்து வெப் சீரிஸைத் தயாரிக்க இருப்பதை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Last Updated : Feb 6, 2020, 11:41 AM IST
வெப் தொடரில் களமிறங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்

பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் நிறுவனத்துடன் இணைந்து வெப் சீரிஸைத் தயாரிக்க இருப்பதை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். அந்தவகையில் பனிஜே ஆசியா, டர்மரிக் மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மாநில மொழிகளில் இணைய தொடர்கள் தயாரிப்பதற்கான கதை, திரைக்கதைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

டர்மரிக் மீடியா-வுடன் கைகோர்த்து, வெப் சீரிஸ்-களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதை அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதை, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 

 

 

பனிஜே ஆசியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News