உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்

Last Updated : Nov 7, 2016, 05:52 PM IST
உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்  title=

இன்று பல பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் . 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய இந்த மகா கலைஞனை பற்றி பார்போம்

1954- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். சென்னை சாந்தோம் பள்ளிகளில் படித்தார். 

1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  

கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய படங்கள் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தன. 

‘அபூர்வ ராகங்கள்’ மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் மலையாளத்தில் கதாநாயகன் பெற்றார் அறிமுகமானார். 

1977-ல் கன்னடத்தில்‘கோகிலா’ என்ற  படம் மூலமாக அறிமுகமானார். ‘கவிதா’ என்ற பெங்காலி மொழி படத்திலும் நடித்துள்ளார். அதேபோல பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்தி படத்திலும் நடித்தார். இதை மூலமாக இந்திய முழுவதும் பிரபலமானார்.

இவரது 100-வது படம் ‘ராஜபார்வை’, இதில் பார்வை இழந்தவராக நடித்து இருந்தார். இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். 

இதுவரை இவர் 5 முறை தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், ஃபிலிம்ஃபேர் விருதுகள்(19 ), மத்திய அரசின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ என ஏராளமான விருதுகள் பெற்றவர். சமிபத்தில் பிரெஞ்ச் அரசின் ‘செவாலியே’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளார். இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

உலக நாயகன் என்ற பட்டத்திற்கு பொறுத்தமான ஒரே மனிதர் கமல்ஹாசன் மட்டுமே. 

நான் தொட்டத அவர் தொட்டாரு, அவர் தொட்டத, நான் தொடல, கலைத்தாய் கமலை மட்டும் தன் மடியில் தூக்கி வைத்து செல்கிறாள் என கமலை பற்றி ஒரே மேடையில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

Trending News