மதம் மாறிய மகள்; வாழ்த்து கூறிய கமல்!

Last Updated : Jul 28, 2017, 04:47 PM IST
மதம் மாறிய மகள்; வாழ்த்து கூறிய கமல்!

உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன் புத்த மதத்திற்கு மாறியுல்லதை அடுத்து அவருக்கு கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தின் முலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவர காத்திருக்கும் விவேகம் படத்தில் நடித்துள்ள அக்‌ஷரா ஹாசன் தற்போது ப்ரமோசன்களில் விலைகளில் பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் 

"முதலில் நாத்திகராக இருந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுளை நேசிப்பவர்களை எப்போதும் மதிப்பேன். எனக்கு புத்த மதம் பிடிக்கும். அது வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்களைக் கற்றுவருவதால் என்னை இணைத்துக் கொண்டேன்". எனத் தெரிவித்தார்.

 

 

இதனைத் அடுத்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹாய்! அக்‌ஷு,  நீ மதம் மாறி விட்டாயா? உனக்கு எனது அன்புகள். இந்த முடிவிற்காக உன்னை வாழ்த்துகிறேன். சிறப்பாக வாழ். லவ் யு பப்பு" -என வாழ்த்துகளை பதிவிடிருகிறார்.

 

More Stories

Trending News