லோகேஷ் கனகராஜ்க்கு கமல்ஹாசன் கூறிய அறிவுரை!

எனக்கு நீங்கள் கொடுத்த அன்பை, உங்களுக்கு எப்படித் திருப்பித் தர போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என லோகேஷ் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 6, 2022, 03:03 PM IST
  • விக்ரம் படம் வசூல் சாதனை செய்து வருகிறது.
  • தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
  • விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ்க்கு கமல்ஹாசன் கூறிய அறிவுரை! title=

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மாஸாக கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்த திரைப்படம் 'விக்ரம்'.  இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலே சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது.  ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருந்த இந்த படம் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காமல் மிகுந்த திருப்தியை அளித்திருக்கிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லர் படம் அதிக நாட்கள் ஓடி, இன்னும் கூடுதலாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் நடித்ததற்கு சூர்யா பெற்ற சம்பளம்!

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உணர்ச்சிவசப்பட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.  அதில், "நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரமுக்கும் எனக்கும் நீங்கள் காட்டிய வரவேற்பு மிகவும் அதிகமாக உள்ளது.  நீங்கள் எனக்கு கொடுத்த அன்பு எல்லாத்தையும் நான் உங்களுக்கு எப்படித் திருப்பித் தர போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.  எப்போதும் கமல் சாருக்கும், மக்களுக்கும் எனது நன்றிகள், உங்கள் எல்லாரையும் நேசிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

 

அதனைத்தொடர்ந்து இப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல்ஹாசன், லோகேஷுக்கு ஒரு சிறப்பான அறிவுரையை வழங்கியிருக்கிறார். "உங்களது அன்பான ரசிகர்களுக்கு நீங்கள் பிரதிபலனாய் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒருபோதும் மனநிறைவடையாமல் இருப்பதுதான். நேர்மையான முறையில் உங்களது வேலையைச் செய்யுங்கள், அவர்கள் அதை மதிப்பார்கள், நேசிப்பார்கள்.  அவர்கள் எனக்கு தரும் அன்பில் இருந்துதான் எனக்கு எனர்ஜி கிடைக்கிறது.  உங்கள் முயற்சிக்கு சக்தி அதிகம்.  RKFI இப்போது உங்களுக்கு துணை நின்றது போல எப்போதும் பெருமையோடு உங்களுக்கு துணை நின்று ஆதரவளிக்கும்" என்று கூறியிருந்தார.

தற்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியிருப்பது  'விக்ரம் 3' அல்லது 'கைதி 2' படத்தில் லோகேஷ் கனகராஜ், கமல், கார்த்தி, ஃபகத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதும், எப்போது மீண்டும் இவர்களின் கூட்டணி இணையும் என்பதும் தான்.  மேலும் RKFI தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.  அதே சமயம் விஜய்யுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு, 'தளபதி67' மூலம் லோகேஷ் கனகராஜ் இணைகிறார், இப்படத்தின் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க | ரோலக்ஸ் vs டில்லி கதாபாத்திரத்தை 8 வருடங்களுக்கு முன்னரே கணித்த சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News