கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட்!!

Last Updated : Jun 9, 2016, 12:48 PM IST
கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட்!! title=

கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார் மற்றும்  உமா தேவி அவர்களும் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். 

கபாலி படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை பார்போம்.

* உலகம் ஒருவனுக்கா... இப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். பாடியவர்கள்- அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா 

* மாய நதி... இப்பாடலை உமா தேவி எழுதியுள்ளார். பாடியவர்கள்- அனந்து. பிரதீப் குமார், ஸ்வேதா மேனன். 

* வீர துரந்தர... இப்பாடலை உமா தேவி எழுதியுள்ளார். பாடியவர்கள்- கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்.

* வானம் பார்த்தேன்... கபிலன் எழுதியுள்ளார். பாடியவர்கள்- பிரதீப் குமார்.

* நெருப்புடா... இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் சிறப்பு இதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ரஜினிகாந்தே எழுதியிருப்பதுதான்.

 

 

Trending News