சர்வதேச அளவில் கர்ணன் படத்திற்கு அங்கீகாரம்: உற்சாகத்தில் படக்குழு!

சர்வதேச அளவில் 'கர்ணன்' படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 12:55 PM IST
சர்வதேச அளவில் கர்ணன் படத்திற்கு அங்கீகாரம்: உற்சாகத்தில் படக்குழு! title=

பரியேரும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கினார் இவர். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது இந்தப்படம்.

இந்நிலையில் தற்போது கர்ணன் படத்திற்க்கு சிறப்பு அந்தஸ்த்து கிடைதுள்ளது. அதன்படி இந்த படம் ஃப்ராங்க்பர்டில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் OTT தளமான அமேசான் பிரைம் மற்றும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுடன் , ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் வெளியானது கர்ணன் படம்.

பலரும் கர்ணன் படத்தை கொண்டாடினார்கள். விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் இந்தப்படம் சாதனை படைத்தது. சப் டைட்டில் உதவியுடன் இந்தியாவின் பிற மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்தது. இந்திய அளவில் 'கர்ணன்' படத்திற்கு பல விமர்சனங்கள் எழுதப்பட்டன. 

இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் 'கர்ணன்' படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட கர்ணன் படம் தேர்வாகியுள்ளது. இந்த செய்தியை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | கர்ணன் FDFS திருவிழா, தியேட்டர்களில் குவிந்த தனுஷ் ரசிகர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News