கோபமாக ஆபீஸ் வந்த தீபா.. சினேகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Kartheegai Deepam Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த அப்டேட்டை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2023, 02:23 PM IST
  • தினமும் 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.
  • இந்த சீரியல் அதிகமானோரால் பார்க்கப்படுகிறது.
  • இதனை Zee 5 தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யலாம்.
கோபமாக ஆபீஸ் வந்த தீபா.. சினேகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் title=

Kartheegai Deepam Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன், நளதமயந்தி, மாரி, அண்ணா, சந்தியா ராகம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற தொடர்களும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன. அதில், கார்த்திகை தீபம் சீரியலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. இதில், கார்த்திகை தீபம் சீரியல் தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியிடம் குருஜி கார்த்திகை தீபத்திற்காக வேறொரு நாள் குறித்து கொடுத்திருப்பதாக சொன்ன அந்த தினத்தில் தீபம் போட எல்லோரும் தயாரான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது குருஜி குறித்து கொடுத்த நேரத்தில் மூன்று பேரும் சேர்ந்து தீபம் போட்டு பூஜையை நல்லபடியாக செய்து முடிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் தீபா ஆபீசுக்கு கோபமாக கிளம்பி வருகிறார். 

மேலும் படிக்க | பெண் பார்ப்பதற்காக வந்து இறங்கும் வெங்கடேசன்! பெண் யார்? அண்ணா சீரியல் டிவிஸ்ட்

ஆபீஸ்க்கு வந்த அவள் பத்து நிமிஷம் வேலைன்னு தானே சொன்னிங்க, என் வீட்டுல முக்கியமான பூஜை இருக்குன்னு சொல்லித்தான் உங்ககிட்ட அனுமதி கேட்டேன் அப்படி இருக்கும்போது ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்க சினேகா நல்ல வேஷம் போட இத நீங்க பிளான் பண்ணி தான் பண்ணுங்கன்னு எனக்கு தெரியும் என தீபா பதிலடி கொடுக்கிறாள். 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக ஒரு கட்டத்தில் சினேகா தீபாவை அடிக்க கை ஓங்க தீபா அவளது கையைப் பிடித்து அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனால் அவள் கேப்பினுக்கு சென்று விடுகிறாள். 

பிறகு சினேகாவின் கேபினுக்குள் தீபா என்னுடைய சினேகா என்ன மன்னிப்பு கேட்க வந்தியா என்று கேட்க தப்பு பண்ணாம நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் அதுக்கு எல்லாம் அவசியமில்லை என்று சொல்கிறாள். நீங்க என்னை விட உயர் பதவியில் இருக்கீங்க உங்கள அவ்வளவு பேரும் முன்னாடி வச்சு அடிச்சா நல்லா இருக்காது என்று சொல்லி ரூமுக்குள் வைத்து அறைகிறாள். 

பிறகு ஆபீஸ் வரும் கார்த்தியும் சினேகாவை பிடித்து திட்ட அவள் அழுது வேஷம் போட்டு தீபா தன்னை அடித்த விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இந்த சீரியலை நீங்கள் Zee5 தளத்திலும் சந்தா செலுத்தி ஸ்ட்ரீம் செய்யலாம்

மேலும் படிக்க | Chennai Flood: விளம்பரம் தேடிய விஷால்.. பதம் பார்த்த நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News