கேஜிஎப் நடிகருக்கு கேன்சர்; பணமில்லாமல் தவிப்பு - திரையுலகினர் உதவ கோரிக்கை

கேஜிஎப் சாச்சா என அழைக்கப்படும் நடிகர் ஹரீஷ் ராய் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2022, 01:27 PM IST
  • கேஜிஎப் நடிகரின் கண்ணீர் கதை
  • புற்றுநோய் பாதிப்பால் அவதி
  • சிகிச்சைக்கு பணமில்லை என தகவல்
கேஜிஎப் நடிகருக்கு கேன்சர்; பணமில்லாமல் தவிப்பு - திரையுலகினர் உதவ கோரிக்கை title=

வெள்ளித்திரையில் ஒரு நடிகரின் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவு வலி திரைக்குப் பின்னால் இருக்கிறது. துணை நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் படும் கஷ்டங்களுக்கு அளவே இல்லை.உலகம் முழுவதும் பிரபலமான கன்னட துணை நடிகர் ஒருவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் போராடும் சூழல் உருவாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல.. உலக அளவில் ‘கேஜிஎஃப்’ சாச்சா என்று அழைக்கப்படும் நடிகர் ஹரிஷ் ராய் தான். அவர் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

நடிகர் ஹரிஷ் ராய் சாண்டல்வுட்டில் நடிக்க ஆரம்பித்தது சுமார் 3 தசாப்தங்களாக கன்னட திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகர் ஆவார். கேஜிஎப்பில் ஹரிஷ் ராயின் நடிப்பை என்றும் மறக்க முடியாது. ஹரிஷ் ராயின் நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக, 4 வருடங்களுக்கு முன் வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் ஹரிஷ் ராய்க்கு உலக அளவில் பெயர் பெற்றுத் தந்தது. இப்படியாக தன் வாழ்க்கையை நடிப்புக்காக அர்ப்பணித்த நடிகர் ஹரீஷ் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரீஷ் ராயின் கண்ணீர் கதை

நடிகர் ஹரிஷ் ராய் முதன்முறையாக ஒரு பேட்டியில் தனக்கு நேர்ந்த கஷ்டம் குறித்து வெளிப்படையாகப் பேசினார். தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கைக்கும் சாவுக்கும் இடையே போராடி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் உதவி தேவையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், கூச்ச சுபாவமுள்ள 'கேஜிஎஃப்' சாச்சா தனது தைராய்டு புற்றுநோய் பிரச்சனை பற்றி எங்கும் சொல்லவில்லை. 

இப்போது தவிர்க்க முடியாத சூழலில் இருக்கும் அவர், தனது கண்ணீரின் கதையை வெளிப்படுத்தியுள்ளார். தைராய்டு புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சாப்பிடக் கூட சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கன்னடத்தின் பெருமைக்குரிய நடிகருக்கு சிகிச்சை பெற சக கன்னடர்களின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ஹரிஷ் ராய்க்கு உதவ, +91 96069-60656 என்ற எண்ணில் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

மேலும் படிக்க | பாரதிராஜாவுக்கு மேல் சிகிச்சை - வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

மேலும் படிக்க | கோப்ரா முன்னோடத்தில் சீயான் விக்ரம் உருக்கமான பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News