சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் புதிதாக நடிக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2024, 01:45 PM IST
  • சிவகார்த்திகேயனின் புதிய படம்
  • விஜய்-அஜித் பட இயக்குநர்
  • யார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?  title=

தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறி, தற்போது டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சமீப காலமாக இவரது படங்கள் சரியாக திரையரங்குகளில் ஓடவில்லை. இந்த நிலையில்தான், இவர் தற்பாேது புதிதாக கைக்காேர்க்க இருக்கும் இயக்குநர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெவ்வேறு பாணி கதைகளை தேர்ந்தெடுக்கும் சிவகார்த்திகேயன்:

‘மெரினா’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே அவர் முன்னணி ஹீரோக்களின் சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் ரசிகர்களை கவர்ந்திழுக்க, அதேப்போன்ற காமெடி ஹீரோ பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். 

கிராமத்து ஹீரோ, காவல் அதிகாரி, வெட்டியாக ஊற் சுற்றும் பையன் என பல்வேறு கேரக்டர்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், பின்னர் கொஞ்சம் சீரியஸான கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இது ஒரு சில சமயங்களில் பிடிக்காமல் போக, அந்த படங்களுக்கு நெகடிவான விமர்சனங்களும் வந்தன. இந்த நிலையில், அவர் புதிதாக நடிக்க இருக்கும்  படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. 

அடுத்த பட இயக்குநர்..!

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், உண்மை சம்பவமான புல்வாமா தாக்குதலை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இப்படத்தின் வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. அதே போல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குபவர், விஜய் மற்றும் அஜித் படங்களின் இயக்குநர் ஆவார். 

அவர் வேறுயாருமில்லை, ஹெச்.வினோத்தான். சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமாகி, ‘தீரன்: அதிகாரம் ஒன்று’ படத்தில் ஹிட் கொடுத்து பின்னர் அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை வைத்து ஹெச்.வினோத் இயக்கும படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

H Vinoth

சிவகார்த்திகேயன் கமிட் ஆகியிருக்கும் படங்கள்:

நடிகர் சிவகார்த்திகேயன், முருகதாஸ் உடனான படத்தில் நடித்து முடித்தவுடன் டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல, ஹெச்.வினோத்தும் முதலில் விஜய்யை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இதையடுத்து தமிழின் இன்னொரு முன்னணி ஹீரோவான தனுஷை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இந்த படங்களுக்கு பின்பு சிவகார்த்திகேயனின் படத்தை இவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

அமரன் எப்போது ரிலீஸ்?

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் அவருடன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம்’ இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படம், வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News