Kiran Rathod : 15 லட்ச ரூபாய் நஷ்டம்..மன உளைச்சலில் நடிகை கிரண்! நடந்தது என்ன?

Latest News Actress Kiran Rathod : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த கிரண், தான் 15 லட்சத்தை இழந்ததாக தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : May 24, 2024, 04:45 PM IST
  • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் கிரண்
  • வின்னர் படம் மூலம் பிரபலம்
  • 15 லட்ச ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறார்
Kiran Rathod : 15 லட்ச ரூபாய் நஷ்டம்..மன உளைச்சலில் நடிகை கிரண்! நடந்தது என்ன? title=

Latest News Actress Kiran Rathod : தமிழ் திரையுலக ரசிகர்கள் பலருக்கு, ஒரு காலத்தில் கணவுக்கண்ணியாக இருந்தவர் கிரண். இவரது முழு பெயர், கிரண் ராத்தோட். தமிழ் தெரியாத தமிழ் பட நடிகையான இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் திரையுலகை விட்டு தள்ளியே இருக்கும் அவர், சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

நடிகை கிரண்:

தமிழ் திரை உலகில் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட். அதன் பிறகு அஜித் நடித்த ’வில்லன்’ கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ சரத்குமார் நடித்த ’திவான்’ பிரசாந்த் நடித்த ’வின்னர்’ விஜய் நடித்த ’திருமலை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் இன்ஸ்டாகிராமில் கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ‘கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் விசாவுக்கு மனு செய்தேன். ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பாஸ்போர்ட்டும் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று நிறுவனத்தின் ஊழியர்கள் சொல்கிறார்கள்.

Kiran Rathod

நான் விசாவுக்கு விண்ணப்பம் செய்து ஒரு மாதம் ஆகியும் எனக்கு பாஸ்போர்ட்டும் கிடைக்கவில்லை விசாவும் கிடைக்கவில்லை. கடந்த 13ஆம் தேதி நான் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றிருக்க வேண்டும். என்னுடைய விமான டிக்கெட், ஹோட்டல் அறை அனைத்தும் தற்போது வேஸ்ட் ஆகிவிட்டது. எனக்கு விசா கிடைக்காததால் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Keerthy Suresh : முத்தக்காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்!? அதுவும் ‘அந்த’ நடிகருடனா?

கிரண் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நடிகை கிரணுக்கு தற்போது 43 வயதாகிறது. முதலில் இந்தி படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதிகளவில் நடித்தது தமிழ் படங்களில்தான். 2001ஆம் ஆண்டு இவர் நடித்த ஜெமினி திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்க, பின்பு ஒரு வருட இடைவேளையில் அஜித்திற்கு ஜோடியாக வில்லன் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜுன், பிரசாந்த் உள்பட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எந்த காரணத்தினாலோ, இவருக்கு 2010ஆம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்து போனது. இதையடுத்து, சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் 2015ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்பட்டாலும், இவருக்கு அதன் பிறகு அது போன்ற படங்கள் எதுவும் அமையவில்லை. கிரண், தற்போது ஒன்லி ஃபேன்ஸ் போன்ற கணக்கை தொடங்கி, அதில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவர் திரைத்துறையை தவிர, வேறு சில தொழில்கள் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News