பிரபல நடிகருக்கு தனது வீட்டை விற்ற த்ரிஷா! அந்த நடிகர் யார் தெரியுமா?

Actress Trisha Sold Her House : நடிகை த்ரிஷாவின் வீட்டை, ஒரு பிரபல நடிகர் வாங்கியிருக்கிறார். அவர் யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 13, 2024, 03:11 PM IST
  • நடிகை த்ரிஷாவின் வீட்டை வாங்கிய நடிகர்..
  • 80களில் பிரபலமானவர்..
  • யார் தெரியுமா?
பிரபல நடிகருக்கு தனது வீட்டை விற்ற த்ரிஷா! அந்த நடிகர் யார் தெரியுமா?  title=

Actress Trisha Sold Her House : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை த்ரிஷா, தனது இல்லத்தை ஒரு பிரபல நடிகருக்கு விற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் யார்? த்ரிஷாவின் இல்லம் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது? இதோ முழு விவரம். 

டாப் ஹீரோயின் த்ரிஷா:

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் ஹீரோயினாக விளங்கி வருபவர், த்ரிஷா. மாடலாக இருந்து, துணை நடிகையாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர் அதன் பிறகு அன்றைய நாயகிகளுக்கு போட்டியாக வளர்ந்தார். இத்தனை வருடங்கள் கடந்த பிறகும், இன்று வரும் புதுமுக நாயகிகளுக்கும் போட்டி நடிகையாக விளங்குகிறார்.

நடிகை த்ரிஷாவையும் அவரை சுற்றி வரும சர்ச்சைகளையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் அதிக ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் த்ரிஷா, தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளை அழகாக கையாண்டு வருகிறார். 40களை கடந்தும், தமிழ் திரையுலகில் சிங்கிளாக வலம் வரும கதாநாயகிகளுள் ஒருவராக இருக்கும் இவர், ஆரம்பத்தில் பல்வேறு நடிகர்களுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். ஒரு முறை, பிரபல தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் வரை செல்ல இருந்த உறவு நிச்சயதார்த்தத்துடன் நின்று பாேனது. 

த்ரிஷா இருந்த வீடு..

தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளுள் பெரும்பாலானோர், சென்னையில் வசித்து வருகின்றனர். ஒரு சிலர், சொந்தமாக பங்களா வீடு வாங்கி வசிக்க, இன்னும் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி அதில் வசித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை த்ரிஷாவும் சென்னையில் இருக்கும் ஒரு பிசியான ஏரியாவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, தனது வீட்டை அவர் காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு குடி பெயர்ந்திருப்பதாகவும், இந்த வீட்டை இன்னொரு பிரபல நடிகர் வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | மகிழ் திருமேனியிடம் சண்டை பாேட்ட த்ரிஷா!? விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்..

யார் அந்த நடிகர்?

நடிகை த்ரிஷா வசித்து வந்த வீட்டை, நடிகர் பானு சந்தர் வாங்கியிருக்கிறாராம். தமிழ் திரையுலகில், 80களில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் பானு சந்தர், தெலுங்கிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். மூடுபனி படத்தில் அறிமுகமான இவர், தமிழில் பல ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அருண் விஜய் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான “ஓ மை டாக்” படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

Trisha

இவர், த்ரிஷா வசித்து வந்த வீட்டை தான் வாங்கியிருப்பதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு பேசியிருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரிசையாக படங்களில் கமிட் ஆன த்ரிஷா:

நடிகை த்ரிஷா, கடந்த 2 ஆண்டுகளாக பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். லியோ படத்தில் நடித்து முடித்தவுடன் ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படத்தில் சைன் செய்த இவர், அடுத்து அஜித் குமாருடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என தொடர்ந்து இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகியிருக்கிறார். இதனால், “இந்த பொங்கல்-த்ரிஷாவின் பொங்கல்” என்று பலர் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான தி கோட் படத்திலும் இவர் “மட்ட” பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியிருந்தார். அதில் இவர் மஞ்சள் புடவையில் ஆடிய நடனத்தையும் பலர் ரீ-கிரியேட் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News