கோலமாவு கோகிலா திரைப்படத்தின் "எதுவரையோ" பாடல் வெளியானது!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா திரைப்டத்தின் "எதுவரையோ" லிரிக்கல் வீடியோ-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Mar 8, 2018, 07:31 PM IST
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் "எதுவரையோ" பாடல் வெளியானது! title=

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா திரைப்டத்தின் "எதுவரையோ" லிரிக்கல் வீடியோ-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியா பெறும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இன்று இப்படத்தின் எதுவரையோ லிரிக்கல் வீடியோவினை படக்குழிவினர் வெளியிட்டுள்ளனர்.

நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிபதிவு செய்கின்றார், நிர்மல் படதொகுப்பு செய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ள இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Trending News