மாநாடு கலேக்‌ஷன்: வார இறுதியில் வசூல் எண்ணிக்கை எவ்வளவு

மாநாடு நேற்று வரை தமிழகத்தில் ரூ 47 கோடி வசூல் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 09:23 AM IST
மாநாடு கலேக்‌ஷன்: வார இறுதியில் வசூல் எண்ணிக்கை எவ்வளவு title=

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடித்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் "மாநாடு"'. அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் சிம்பு கேரியரில் ஒரு சிறந்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் (Maanadu) சிம்புவிற்கு (Actor Simbu) ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ரிலீஸ் செய்யும் நேரத்தின்போதும் பிரச்னையை சந்தித்து ஒருவழியாக திரையரங்குகளில் ரிலீசானது.

ALSO READ | சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி

ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ரிலீசான இரண்டே நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தற்போது மாநாடு உலகம் முழுவதுமே எல்லா ஏரியாக்களிலும் வசூல் மழை படைத்து வருகிறது. அதனபடி வார நாட்களில் வசூல் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் வார இறுதியின் மீண்டும் வசூல் மழை கொட்டோ கொட்டோனு கொட்ட ஆரம்பித்துவிட்டது.

அதன்படி தற்போது மாநாடு நேற்று வரை தமிழகத்தில் ரூ 47 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 65 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான மாஸ்டர், கர்ணன் போன்ற படங்கள் ரிலீசான அன்றே வசூல் சாதனை செய்த நிலையில் சிம்புவின் மாநாடு படமும் அந்த சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிசில் இப்படம் முதல் இடத்தையும் , மலேசியா பாக்ஸ் ஆபிசில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இப்படம் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த படக்குழுவினருக்கு போன் செய்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

ALSO READ | 'மாநாடு' படத்தில் நடிக்க இருந்த விஜய்! கைவிட்டு போனது ஏன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News