நடிகர் தனுஷின் புதிய படம் இதுதான்! முழு அப்டேட் உள்ளே!!

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Jan 22, 2019, 12:24 PM IST
நடிகர் தனுஷின் புதிய படம் இதுதான்! முழு அப்டேட் உள்ளே!! title=

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தனுஷ் தனது டிவிட்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். 

 

 

 

Trending News