‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மகேஸ்வரி காலமானார்

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்று மெட்டி ஒலி. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2021, 04:43 PM IST
‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மகேஸ்வரி காலமானார்

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்று மெட்டி ஒலி. சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான இந்த சீரியல் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

சின்ன திரையில் சாதனை படைத்த, மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார்.  உமா மகேஸ்வரியின் வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக  உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர்  இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை உமா மகேஸ்வரி மறைவை அடுத்து சின்னத் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

இந்த தொடரில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி,  உமா மகேஸ்வரி, காயத்ரி, வனஜா, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜகாந்த், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் இயக்குநரான திருமுருகன் கோபி என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக உமா மகேஸ்வரி நடித்திருப்பார். 

சேரன் இயக்கத்தில் வெளியான பார்த்திபன், முரளி, மீனா, மாளவிகா உள்ளிட்டோர் நடித்த வெற்றிக் கொடிகட்டு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் உமா மகேஸ்வரி. அல்லி அர்ஜுனா, உன்னை நினைத்து, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்றாலும் சின்ன திறை தான் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது. 

ALSO READ கேரளா மாநில விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய Kappela திரைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News