ட்விட்டரில் ஜெயம் ரவி, த்ரிஷாவின் ப்ளூ டிக் பறிப்பு..பின்னணி என்ன?

Jayam Ravi, Trisha: ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோரின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக் பறிக்கப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2023, 03:38 PM IST
  • ப்ளூ டிக்கை பறிகொடுத்த த்ரிஷா, ஜெயம் ரவி.
  • சோழர்களுக்கு வந்த சோதனை.
  • பெயர் மாற்றம் தான் காரணமா?
ட்விட்டரில் ஜெயம் ரவி, த்ரிஷாவின் ப்ளூ டிக் பறிப்பு..பின்னணி என்ன? title=

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களில் ஒன்றாகும். கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்து உள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் '4DX' வடிவத்திலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். மேலும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரைக்கு வர உள்ளது.  ஏப்ரல் 21ம் தேதி பிஎஸ்-1 படத்தை மீண்டும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! முழு விவரம்!

இதற்கிடையில் இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக ஆரம்பமாகி நடந்து வருகின்றது. இதற்காக இப்படத்தின் குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இவர்கள் ஆன்லைனிலும் புரமோஷன் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா டுவிட்டரில் தனது பெயரை மாற்றி இருக்கிறார். அதேபோல் ஜெயம் ரவியும் தனது பெயரை மாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் இவர்கள் இருவரின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷாக் ஆன நடிகை திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே Tris என மாற்றி இருக்கிறார். அதேபோல் ட்விட்டர் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இனி ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா..பாக்கியலட்சுமியில் டுவிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News