சில நாட்களுக்கு முன்பு, மலையாள நடிகை பாவனாவுக்கு, அவரது முன்னாள் கார் டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து, ஓடும் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.
மேலும் கார் டிரைவர் மற்றும் சிலரால் கடத்தில் மானபங்கப்பட்டுத்தப்பட்ட நடிகை பாவனாவுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் பாவனா. மலையாளத்தில் இன்று முன்னணி நடிகை அவர்தான். சில தினங்களுக்கு முன் பாவனா ஷூட்டிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் ட்ரைவர் சுனில்குமார் திட்டமிட்டு ஆள் வைத்துக் கடத்தி, காரிலேயே 2 மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாவனா விஷத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சங்கம் கேரளா முதலமைச்சருக்கு கடிதம் அனிப்பி உள்ளனர்.
பாவனா விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் . #siaa pic.twitter.com/E6IICvITS7
— NadigarSangam PrNews (@NadigarsangamP) February 20, 2017