)
திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine) வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. xforia Igene என்ற நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். ஒரு பள்ளியில் பிசிக்ஸ் ஆசிரியருக்கு சிறுவயது முதலே தான் ஆண் இல்லை பெண் என உணர்ந்து ஒரு கட்டத்தில் சிகிச்சை மூலம் பெண்ணாக மாற முடிவு எடுக்கிறார். இந்த சமூகம் அவரை எப்படி பார்க்கிறது? அவரது முடிவுக்கு பின் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்ன? என்பதை மிக ஆழமாக கூறுகிறது படம்.
அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்சமயம் நல்ல கதைகளாக ஜமா, வாழை, கொட்டுக்காளி, லப்பர் பந்து என சிறு முதலீட்டு தயாரிப்புகள் வந்து விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று வரும் வரிசையில் இந்த நீல நிறச் சூரியனும் பாராட்டு பெறும்.
Happy to release the official teaser of NEELA NIRA SOORIYAN
— Pari Elavazhagan (@PariElavazaghan) September 21, 2024
Congrats to whole team https://t.co/MEAisBEzW3#SamyukthaVijayan @Masanth95 @KowsikRanganat1 @cablesankar @RaamPbr77 @itsselvaa @imsiva__08 @xforiaigene @KskSelvaKumaar pic.twitter.com/dlnbYk3Dd3
“ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன்” என்கிறார் திருநங்கை சம்யுக்தா விஜயன். இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளையும் மிகச்சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ