சென்னை: வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகள் ஆவார். சந்திரலேகா படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்2019-ம் ஆண்டு பிக் பாஸ்-3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
சமீபகாலமாக சர்ச்சை நடிகையாகவும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.இவரது பல திருமண வாழ்க்கைகள் தான் முக்கிய சர்ச்சைகளுக்கே காரணம். தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் பிக்கப் டிராப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி தாலி, மாலை என போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதையடுத்து க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது டாப் ஆங்கிள் போஸில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட வனிதாவிற்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மெசேஜ் செய்துள்ளார் ஒரு ரசிகர். இதற்கு வனிதா விஜயகுமார் என்ன பதிலளிப்பார்??? என்று ரசிகர்களும் கேள்வி கேட்டு பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR