சமுத்திரக்கனி நடிப்பில் 'பெட்டிக்கடை'; trailer வெளியானது!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள பெட்டிக்கடை திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Feb 8, 2019, 06:38 PM IST
சமுத்திரக்கனி நடிப்பில் 'பெட்டிக்கடை'; trailer வெளியானது! title=

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள பெட்டிக்கடை திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

காவல் காப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருந்தால் நாட்டை சூறையாடும் கார்பரேட் கம்பெனிகள் நாட்டில் நுழைந்திருக்காது என்னும் மைய கருவை கொண்டு இப்படத்தினை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

கிராமத்தில் பெட்டி கடை ஒன்று காணமல் போகிறது, காணாமல் போகும் பெட்டிக் கடையினை மீண்டும் வர மக்கள் முயற்சிக்க அதற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் பல எதிர்ப்புகள் வருகிறது. அத்துனை எதிர்ப்புகளையும் மீறி கடை மீண்டும் கொண்டு வரப்படுகிறதா இல்லையா என்பதை ஆக்ஷன் காமெடி கலந்து பக்கா கமர்ஷியல் படமாக இயக்குநர் அளித்துள்ளார்.

படத்தின் நாயகனாக சமுத்திரகனி மற்றும் வீரா நடித்துள்ளனர். மற்றும் நடிகை சாந்தினி மருத்துவராக நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Trending News