Oscars 2020: சிறந்த அனிமேஷன் படம்- டாய் ஸ்டோரி 4க்கு வழங்கப்பட்டது

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது டாய் ஸ்டோரி 4 படத்துக்கு கிடைத்துள்ளது.

Last Updated : Feb 10, 2020, 09:46 AM IST
Oscars 2020: சிறந்த அனிமேஷன் படம்- டாய் ஸ்டோரி 4க்கு வழங்கப்பட்டது title=

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது டாய் ஸ்டோரி 4 படத்துக்கு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் அகாடமி விருது. 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

92 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கு கிடைத்தது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது டாய் ஸ்டோரி 4 என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஷ் கூலி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாம் ஹாங்க்ஸ், டிம் ஆலன், டோனி ஹேல் உட்பட பலர் நடித்துள்ள படம் இது.

Trending News