யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் (UPI) புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி UPI பரிவர்த்தனை மற்றும் வாலட் மூலம் பணம் செலுத்துவதற்கான வரம்பை அதிகரித்துள்ளது. ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதிகளின்படி, UPI 123Pay பயன்படுத்தி 5000 ரூபாய்க்கு பதிலாக 10000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இதனால் PhonePe, UPI மற்றும் Paytm போன்றவற்றை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மக்கள் எளிதாக செய்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க - பொங்கல் 2025: இலவச வேட்டி, சேலை குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி
ஆனால் இந்த புதிய விதியை முழுவதுமாக பயன்படுத்த, குறிப்பிட்ட வாலட் KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும். மேலும் வாலட்டுடன் ஆப் இணைக்க வேண்டும். வாலட்டில் இருந்து UPI மூலம் பணம் செலுத்தும் போது, முதலில் பணம் செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படும். பிறகு UPI செயலிக்கான அணுகலை பெற முடியும். அதே போல UPI மூலம் பணம் செலுத்த OTP அவசியம் என்ற விதியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஜனவரி 1 முதல் அமல்படுத்துகிறது. டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருவதால், மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த விதிகளை கொண்டு வந்துள்ளது.
UPI 123Payல் பணம் செலுத்த பயனர்கள் 4 விருப்பங்களைப் பெறுகிறார்கள். IVR எண், கால் அழைப்புகள், OEM மற்றும் ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் இனி OTP அடிப்படையிலான சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆர்பிஐயின் இந்த புதிய விதிகள் மூலம் மக்கள் அதிக பணத்தை அனுப்பி கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சமாகும், அதே சமயம் பணமும் பாதுகாப்பாக சென்று சேரும். UPI 123Pay சேவையை இணையம் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே அதிக பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் 2024ல் NPCI மற்றொரு விதியையும் மாற்றியது. வருமான வரி செலுத்துவோருக்கான கட்டண வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. முன்பு இது 1 லட்சம் என்று இருந்தது, பின்னர் அதிகரிக்கப்பட்டது. கடந்த 16 செப்டம்பர் 2024 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. வருமான வரி மட்டுமின்றி, கல்வி செலவுகள், மருத்துவமனை செலவுகள் மற்றும் IPOகள் தொடர்பான பரிவர்த்தனைகளிலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அந்த அந்த வங்கிகள் தான் கட்டண வரம்பை நிர்ணயிக்கும். HDFC மற்றும் ICICI போன்ற தனியார் வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தும் வரம்பை வைத்துள்ளன.
மேலும் படிக்க - RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ