Tamil Nadu Latest News Updates: சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ஒருதலைக்காதல் தோல்வி காரணமாகவும், தன்னுடன் பேசுவதை நிறுத்தியதாலும் ஆத்திரத்தில் சதீஷ் என்பவர் கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூக்கு தண்டனை
இதில் சதீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 24 மாதங்களாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வந்தது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து வீடியோ ஆதாரம், சத்யபிரியாவின் தோழி உள்பட சம்பவ இடத்தில் இருந்த 70க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சதீஷ் குற்றவாளி என அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பும் இன்று அறிவிக்கப்பட்டது. அல்லிக்குளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளி சதீஷிற்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையையும் வழங்கி உள்ளது.
மேலும் படிக்க | தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!! காரணம் என்ன?
2022ஆம் ஆண்டில் நடந்தது என்ன?
சென்னை ஆதம்பாக்கத்தில் சத்யா (20) வீட்டிற்கு எதிரே வசித்து வந்தவர் சதீஷ். இவர் 8ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். சதீஷ் நீண்ட காலமாக சத்யாவை காதலிப்பதாக பின்னாடியே சுற்றியுள்ளார். பலமுறை சத்யாவிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார், ஆனால் சத்யா அதனை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். மாம்பலத்தில் உள்ள கல்லூரியில் படித்த வந்த சத்யாவுக்கு தொடர்ந்து தொல்லைக்கு கொடுத்து வந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சத்யாவுக்கு திருமண நிச்சயம் ஆனது. இதை தொடர்ந்து சதீஷ் அவருக்கு மேலும் தொல்லை கொடுத்துள்ளார். ரயிலில் தொடர்ந்து சதீஷ் சத்யாவை சித்ரவதை செய்துள்ளார், தன்னுடன் பேசிப் பழக்கும்படி தொல்லைக் கொடுத்துள்ளார். சத்யாவின் தந்தை சத்யாவை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு எப்போதும் அழைத்து வருவார். அங்கிருந்த சத்யபிரியா கல்லூரிக்குச் சென்றுவிட்டார். சதீஷை தவிர்ப்பதற்கு சத்யா ரயிலில் செல்லும் நேரத்தில் இருந்து பல விஷயங்களை மாற்றியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து சதீஷ் பிரச்னை செய்து வந்துள்ளார்.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாம்பலம் செல்ல ரயிலுக்காக சத்யா காத்திருந்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், சத்யாவுக்கு வழக்கம்போல் தொல்லைக் கொடுத்தது மட்டுமின்றி ஆத்திரத்தில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். சத்யா உயிரிழந்த சிலமணிநேரங்களில் அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். மேலும், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாயாரும் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. சத்யாவின் தங்கையான 8 வயது சிறுமி பெற்றோர் இன்றி நிர்கதியாக நிற்கிறார்.
மேலும் படிக்க | சொன்ன சொல் தவறும் விஜய்...? ஆளுநர் சந்திப்புக்கு பின்... அரசியல் களத்தில் சலசலப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ