‘பிஎம் நரேந்திர மோடி’ : வெளியானது ரிலீஸ் தேதி!!

பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 12 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்பு.

Last Updated : Mar 15, 2019, 05:51 PM IST
‘பிஎம் நரேந்திர மோடி’ : வெளியானது ரிலீஸ் தேதி!! title=

பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 12 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்பு.

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார்.

பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 12 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 12 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Trending News