ஜோதிகாவின் புதுப்படதிற்கு விஜய்யின் சூபர் ஹிட் பாடல் தான் தலைப்பு!

ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு “பொன்மகள் வந்தாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது!!

Updated: Jul 15, 2019, 03:27 PM IST
ஜோதிகாவின் புதுப்படதிற்கு விஜய்யின் சூபர் ஹிட் பாடல் தான் தலைப்பு!

ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு “பொன்மகள் வந்தாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது!!

ஜோதிகா நடிப்பில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியான படம் 'ராட்சசி'. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கௌதம் ராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் பின்னணி இசையமைத்திருந்தார். கீதா ராணி என்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜோதிகா. 

இதனையடுத்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். மேலும், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், ஜோதிகாவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்றென்றும் புன்னகை பட இயக்குனர் அகமதுவின் முன்னாள் துணை இயக்குனராக ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்கத்தில் உருவாகி படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக்கொண்டுள்ளார். “பொன்மகள் வந்தாள்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்ட்ர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 96 படத்தின் மூலம் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த கோவிந்த வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.