தனக்கு உண்டான மாஸ் ஸ்டைல்..!! வெளியானது "தர்பார்" திரைப்படத்தின் ட்ரைலர்

தனக்கு உண்டான மாஸ் ஸ்டைலில் நடிகர் ரஜினிகாந்த் கலக்கி உள்ள "தர்பார்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 16, 2019, 07:31 PM IST
தனக்கு உண்டான மாஸ் ஸ்டைல்..!! வெளியானது "தர்பார்" திரைப்படத்தின் ட்ரைலர் title=

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. "தர்பார்" ட்ரைலரை பார்த்தால், பழைய, அந்த ஸ்டைலான ரஜினி மீண்டும் வந்துவிட்டார் போல தெரிகிறது. தனக்கு உண்டான மாஸ் ஸ்டைலில் நடிகர் ரஜினிகாந்த் கலக்கி உள்ளார். 

"தர்பார்" திரைப்படதிதல் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பிரமாண்ட படத்தை லைகா புரொடக்சன் தயாரிகிறது.

ஏற்கனவே "தர்பார்" படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் 167-வது படமாக உருவாகியிருக்கும் "தர்பார்" படத்தின் ட்ரைலர் காணுங்கள்....!!

 

Trending News