தனுஷை ஆசீர்வாதம் செய்த ரஜினி

தனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

Last Updated : Dec 15, 2016, 03:16 PM IST
தனுஷை ஆசீர்வாதம் செய்த ரஜினி title=

சென்னை: தனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

தனுஷ் நடிப்பில் ஹிட்டான படம் தான் வேலை இல்லா பட்டதாரி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.  

இந்நிலையில் இந்த படத்தை ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவங்கி வைத்தார். விஐப-2 பட பூஜையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். மருமகனுக்கு மாலை அணிவித்து கிளாப் போர்டை தட்டி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் விஐபி-2 படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

சவுந்தர்யா ரஜினிகாந்த் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் ஐ லவ் யூ அப்பா என டிவீட் செய்துள்ளார்.

 

 

இதை விட நான் என்ன கேட்க முடியும்? நன்றி தலைவா உங்களின் ஆசியுடன் விஐபி-2 இன்று துவங்கியது என தனுஷ் டிவிட் செய்துள்ளார்.

 

 

Trending News