சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் திடீர் மாற்றம்?

'தலைவர் 171' படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனரை நடிகர் ரஜினிகாந்த் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 12, 2022, 09:17 AM IST
  • ரஜினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் திடீர் மாற்றம்? title=

தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வயதிலும் இளம் வயதில் இருந்த அதே சுறுசுறுப்போடும், துள்ளலோடும் கலக்கி வருகிறார்.  தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிக்கடி நிரூபித்து வருகிறார், ரஜினியின் திரை பயணத்தில் தோல்வி படமாக அமைந்த 'பாபா' படம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது.  இந்த படம் குறிப்பாக 2கே கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது மற்றும் மாண்டஸ் புயலுக்கு மத்தியிலும் இந்த படம் ரூ.1.50 கோடி வசூல் செய்திருக்கிறது.

மேலும் படிக்க | என்ன செய்வேன் தெரியுமா...? பாலியல் வன்கொடுமை குறித்து கீர்த்தி சுரேஷ்

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  இந்த படத்தில் கன்னட பிரபலம் சிவராஜ்குமார் மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சிங்கம்' படத்தில் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Rajini

அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், டான் பட புகழ்  சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது இயக்குனர் கூறிய கதை ரஜினிகாந்திற்கு பிடிக்கவில்லையாம் அதனால் இவர் வேறு இயக்குனரை தேர்வு செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.  மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி, 'தலைவர் 171' படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சமந்தாவுக்கு வந்த நோய் எனக்கு வந்தது - மனம் திறந்த அஜித் பட நடிகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News