சமந்தாவின் சாகுந்தலம், அழகான மற்றும் அட்டகாசமான் போஸ்டர்

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2022, 11:37 AM IST
  • நடிகை சமந்தா மகாகவி காளிதாஸ் எழுதிய புராணகதையில்
  • சகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா
  • இணையதளங்களில் வைரலாகி வருகிறது
சமந்தாவின் சாகுந்தலம், அழகான மற்றும் அட்டகாசமான் போஸ்டர் title=

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா. இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 22 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை சமந்தா மகாகவி காளிதாஸ் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையில் நடித்து வருகிறார். இந்த கதையின் நாயகியான சகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா உடன் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் குணசேகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க | ரஷ்ய மொழியில் வெளியாகபோகும் கார்த்தியின் “கைதி” !

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் நடிகை சமந்தாவின் தோற்றம் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் சாகுந்தலம் தவிர யசோதா ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் அவர் தி ஃபேமிலிமேன் தொடர் இயக்குனரின் அடுத்த வெப்தொடரிலும் ஹாலிவுட் வெப்தொடரிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கைதி படத்தில் தான் பணிபுரிந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த இந்த நடிகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News