வெளியானது சமந்தாவின் 'யூ' டர்ன் பட ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தாவின் நடிப்பில் உருவான 'யூ' டர்ன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

Last Updated : Jul 23, 2018, 10:27 AM IST
வெளியானது சமந்தாவின் 'யூ' டர்ன் பட ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தாவின் நடிப்பில் உருவான 'யூ' டர்ன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்றது 'யூ' டர்ன் திரைப்படம். தமிழில் இப்படத்தில் சமந்தா, ஆதி, ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிவருகிறது. 

மேலும், இப்படத்தில் நடிகை பூமிகா முக்கிய காதாபத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் தெரிவிக்கிறார் சமந்தா. தற்போது நடித்து வரும் 'யூ-டர்ன்' கதாநாயகிக்கு முக்கியம் வாய்ந்த கதைதான். படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார்.   

இயக்குநர் பவன்குமாரின் முந்தைய கன்னடப் படமான லூசியா என்ற திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தைத் தமிழில் 'எனக்குள் ஒருவன்' என்று ரீமேக் செய்து தோல்வியைத் தழுவியது. எனவே, தானே இப்படத்தை தமிழில் ரீமேக் செய்வது உகந்ததாக இருக்கும் எனத் தமிழில் அறிமுகமாகிறார் பவன்குமார். 

இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதே தேதியில் சமந்தா சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படமும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

More Stories

Trending News