நடிகர் விஜய் புகைப் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்ற சர்கார் பட பேனர் திருச்சூரில் உள்ள தியேட்டரில் வைத்து இருந்ததாக கூறி நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்கார் படம் வெளியாவதற்கு முன்பு, அந்த படத்தின் போஸ்டகள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்று நடிகர் விஜய் புகைப் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்ற சர்கார் பட போஸ்டர் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கு தமிழக அரசின் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த புகைப்படம் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். எனவே உடனடியாக அந்த போஸ்டரை அகற்ற வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்ற சர்கார் பட போஸ்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
தற்போது மீண்டும் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் சர்கார் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்தமுறை தமிழகத்தில் இல்லை. கேரளாவில் ஏற்ப்பட்டுள்ளது. நடிகர் விஜய் புகைப் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்ற சர்கார் பட பேனர் திருச்சூரில் உள்ள தியேட்டரில் வைத்து இருந்ததாக கூறி, அவர் மீது சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. விசாரணையில் தவறு நிரூப்பிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.