திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் விழுந்ததை அடுத்து, அந்த குழந்தையை மீட்க தொடர்ந்து 17 மணி நேரமாக அனைவரும் போராடி வருகின்றனர். அந்த குழந்தையை எப்படியாவது பத்திரமாகவும், உயிருடனும் மீட்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமில்லாமல், உலக முழுவதும் ஆதரவு குரல் எழுப்பட்டு வருகிறது. அந்த குழந்தைக்காக அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் #SaveSurjith மற்றும் #PrayforSurjith போன்ற ஹெஷ்டேக் மூலம் குழந்தை மீண்டு வரவேண்டும் என கோரிக்கையுடன் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று முதல் தற்போது வரை 17 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பல திரைத்துறையினரும் டிவிட்டரில் சுர்ஜித் பத்திரமாக மீண்டு வரவேண்டும் எனவும், அதேவேலையில், ஆழ்துளை கிணறு விசியத்தில் அலட்சியமாக இருந்த அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், இவ்வளவு விஞ்ஜானம் வளர்ந்துவிட்ட நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடவேண்டி உள்ளது எனவும் வருத்தம் தெரிவித்துல்ளனர்.
இந்தநிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விவேக், "சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு." எனப் பதிவிட்டுள்ளார்.