'பர்த் மார்க்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் 'பர்த் மார்க்' படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 22, 2024, 01:23 PM IST
  • 'பர்த் மார்க்' படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
'பர்த் மார்க்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு title=

‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பர்த்மார்க்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம் சிவராமன் என்பவரோடு இணைந்து அவரே படத்தை தயாரித்தும் இருக்கியுள்ளார். 90களில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு - கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் என்ற கிராமத்தை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் 'பர்த் மார்க்' படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியதாவது, "குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால்தான். இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு விஷயமும் 'பர்த் மார்க்' போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும். மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண் மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம் இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும்".

மேலும் படிக்க | Mangai Movie : மங்கை மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது: நடிகை கயல் ஆனந்தி

நடிகர் ஷபீர், "'சார்பட்டா' படம் மூலம் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் நன்றி. 'சார்பட்டா' படத்திற்குப் பிறகு நான் முதலில் கையெழுத்துப் போட்ட படம் இது. இதன் பிறகுதான், 'கிங் ஆஃப் கொத்தா', 'நட்சத்திரம் நகர்கிறது' மற்றும் இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்தேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இயக்குநர் கொடுத்த இன்புட் வைத்தே படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். மிர்னாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான், அவரால் இங்கு வரமுடியவில்லை. படத்தில் லிப்லாக் வைக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. கதைக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டது. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார். 

மேடையில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன், ஷபீருடன் நடிகர்கள் தீப்தி, பொற்கொடி, ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், எடிட்டர் இனியவன் பாண்டியன் எனப் படக்குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | Rakul Preet Singh: காதலரை கரம் பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News