ரஞ்சிதமே பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஷிவானி, இன்ஸ்டாகிராமில் தெறி ஹிட்

ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணனின் வீடியோன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 15, 2022, 11:48 AM IST
  • ரஞ்சிதமே பாடலுக்கு செம டான்ஸ் ஆடும்.
  • ரசிகர்களை ஈர்க்கும் மாஸ் டான்ஸ்.
  • ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம்.
ரஞ்சிதமே பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஷிவானி, இன்ஸ்டாகிராமில் தெறி ஹிட் title=

ஷிவானி நாராயணன் டான்ஸ் வீடியோ வைரல்: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 

இததற்கிடையில் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஷிவானி நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்

இந்த நிலையில் தற்போது  3.5 மில்லியன் ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருக்கிறார்கள். இதில் இவர் 325 போஸ்ட் போட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் போஸ்ட்க்கும் லைக்குகளும், கமெண்டுகளும் தினம் தினம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் சமீபத்தில் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோவை இதுவரை 80,000-த்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

இந்த வீடியோவில் நடிகை ஷிவானி பார்ட்டி வியர் உடை அணிந்துள்ள சூப்பராக நடனமாடியிருக்கிறார்.

மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News