சிங்கர் சில்க் ஸ்மிதாவையும் ரசிக்கும் ரசிகர்கள்..! அரிய வீடியோ

மலேசியா வாசுதேவனோடு சேர்ந்து ஒரே மேடையில் பாடும் சில்க் ஸ்மிதாவின் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:27 PM IST
சிங்கர் சில்க் ஸ்மிதாவையும் ரசிக்கும் ரசிகர்கள்..! அரிய வீடியோ title=

ஒப்பனைக் கலைஞராக சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த சில்க் ஸ்மிதா, நடிப்பு, நடனம், கவர்ச்சி என தென்னிந்திய சினிமாவையே 90களில் ஆட்டிப்படைத்தார். விணு சக்ரவர்த்தியின் வண்டிச் சக்கரம் படம் மூலம் அறிமுகமான அவர், அதன்பின் அவர் கண்ட உயரம் சினிமாத்துறையின் உச்சம். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். 

ALSO READ | ’தளபதிக்கு ஜோடியானதை மறக்கமுடியாது’ இயக்குநருக்கு நன்றி சொன்ன நடிகை

முழு படம் நடிக்காவிட்டாலும், சில்க் ஸ்மிதா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினால் மட்டும் போதும் என்ற நிலைகூட தமிழ் சினிமாவில் இருந்தது. இதற்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை வலைவீசி தேடினர். அந்தளவுக்கு பட வாய்ப்புகளால் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தென்னிந்திய திரைத்துறையில் உட்சநட்சத்திரங்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த சில்க் ஸ்மிதாவின் நடனம், நடிப்பு மட்டுமே தெரிந்த பலர், அவர் பாடியதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகராக இருந்த மலேசியா வாசுதேவனுடன் இணைந்து மேடைக்கச்சேரியில் சில்க் ஸ்மிதா ’சுராங்கனி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாடிக்கொண்டே அவர் ஆடும் இந்த வீடியோ, நெட்டிசன்களை கவனத்தைப் பெற்று ஆயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது.

ALSO READ | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News