SK15: சிவகார்த்திகேயன் படம் குறித்து முக்கிய அறிவிப்பு இதோ!

சிவகார்த்திகேயன் - மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 12, 2019, 06:32 PM IST
SK15: சிவகார்த்திகேயன் படம் குறித்து முக்கிய அறிவிப்பு இதோ! title=
சிவகார்த்திகேயன் - மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
 
ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
 
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். 
 
இந்தநிலையில், படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் நாளை படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Trending News