மீண்டும் இணையும் சூர்யா - பாலா கூட்டணி!

20 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் பாலாவும், சூர்யாவும் இணைத்து படம் பண்ண உள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2021, 01:58 PM IST
மீண்டும் இணையும் சூர்யா - பாலா கூட்டணி! title=

சூர்யா மற்றும் பாலா இணையும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.  இந்த நற்செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்காக இயக்குனர் பாலா மற்றும் அவரது அப்பா சிவகுமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூர்யா இயக்குனர் பாலாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைய உள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

 

சூர்யா தற்பொழுது நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளிவரவுள்ள ஜெயிபீம் படத்திற்கான வேளைகளில் இறங்கியுள்ளார்.  ஞானவேல் இயக்கத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  தெறி பறக்கும் வசனங்களுடன் ட்ரைலர் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதுஉள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.  

ALSO READ கோர்ட்ல நீதி கிடைக்கலைனா ரோட்ல எறங்கி போராடுவேன்! வெளியானது ஜெய் பீம் ட்ரைலர்!

பாலா இயக்கத்தில் சூர்யா கடைசியாக நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் நடித்தார்.  நந்தா திரைப்படம் சூர்யா திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.  தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யா - பாலா இணையவுள்ளனர்.  இந்த படத்தினை பற்றிய தகவல்கள் பல நாட்களாக வந்த நிலையில் இன்று அதிகார்வ பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.  " என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…" என்று சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  பாலா இயக்கும் இந்த படத்தை சூர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை.  கடைசியாக பாலா ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தினை இயக்கினார்.

ALSO READ கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி- தூள் கிளப்பும் வெற்றிமாறன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News