Kanguva: இதுதான் கங்குவா படத்தின் கதையா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Kanguva: ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் வெறித்தனமான செகண்ட் லுக் வெளியாகியுள்ளது!  

Written by - RK Spark | Last Updated : Jan 17, 2024, 07:46 AM IST
  • 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் கங்குவா.
  • கங்குவா செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
  • ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
Kanguva: இதுதான் கங்குவா படத்தின் கதையா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! title=

Kanguva: நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான 'கங்குவா'வின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் 'சிங்கம்', 'பருத்தி வீரன்', 'சிறுத்தை', 'கொம்பன்', 'நான் மகான் அல்ல', 'மெட்ராஸ்', 'டெடி', சமீபத்தில் வெளியான 'பத்துதல' போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத்  திரையுலகில்  தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | Mysskin: மிஷ்கினிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

இன்று படக்குழுவினர் இந்தப் படத்தின்  இரண்டாவது பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் பார்த்தவுடனேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.  போஸ்டரில் சூர்யாவின் இரு தோற்றமும் பிரமாதமாக இருக்கிறது. சூர்யாவின் வசீகரமான திரை இருப்பு மற்றும் சக்திவாய்ந்த கண்கள் ரசிகர்களை இதில் அதிக அளவில் கவர்ந்தன. படத்தின் ஒவ்வொரு புரோமோஷனல் மெட்டீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகவே இருக்கிறது. 'கங்குவா'வின் உலகம் புதுவிதமாக அமைந்து பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் புதிய காட்சி அனுபவத்தை அளிக்கும். மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய மையமாக இருக்கும். இந்த பான்-இந்தியன் படமான ‘கங்குவா’வின் பணிகள் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா  தனது படப்பிடிப்பை முடித்தார்.

சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கங்குவா படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருந்தது.  ஆனால் அவர்களின் மற்றொரு தயாரிப்பான தங்களான் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர், இதனால் கங்குவா அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டாரே..’ பிரசாந்தை கண்டு கலங்கும் நெட்டிசன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News