முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் எனக்கூறிவிட்டு தமன்னா செய்த செயல்..செம ஷாக்கில் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா, தற்போது தான் நடித்துள்ள ஒரு தொடரில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2023, 12:44 PM IST
  • தமன்னா ஜீ கர்தா என்ற தொடரில் நடித்துள்ளார்.
  • இந்த தொடரில் இவர் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து.
  • இதுகுறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் எனக்கூறிவிட்டு தமன்னா செய்த செயல்..செம ஷாக்கில் ரசிகர்கள்..! title=

தமன்னா, தற்போது ஜீ கர்தா எனும் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் அமேசான் தளத்தில் நேற்று வெளியானது. அதில் தமன்னா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். மேலும் சில ஆபாச காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. 

ஜீ கர்தா தொடர்: 

பாலிவுட் இயக்குநர் அருணிமா ஷர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள தொடர், ஜீ கர்தா. இதில், நடிகை தமன்னா, சுஹைல் நாயர், அஷிம் , சிமோன் சிங் உள்ளிட்ட பிரபல இந்தி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த தொடரில் மொத்தம் 8 எபிசோடுகள் உள்ளன. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் 7 பேரையும் அவர்களது வாழ்வில் நடக்கும் காதல்-காமம் போன்ற சுவாரஸ்யமான விஷயங்களையும் வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர், அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. 

ஆபாச காட்சிகளில் தமன்னா: 

நடிகை தமன்னா, ஜீ கர்தா தொடரில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இதில், பலவகையான பலான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், தமன்னா கொஞ்சம் ஓவராகவே ஆபாசம் காட்டியுள்ளதாக ரசிகர்கள் உச் கொட்டுகின்றனர். இதில் வரும் டைலாக்குகள், தமன்னாவின் ஆபாச காட்சிகளையும் அவரை குரை சொல்லும் ரசிகர்களே ட்விட்டர் தளத்தில் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Samantha: ஒரு தொடரில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறியவர்...

நடிகை தமன்னா, திரைக்கு வந்த புதிதில் அவ்வப்போது இடுப்பை காண்பிப்பது தொடையை காண்பிப்பது என்றிருந்தார். இதையடுத்து, தென்னிந்திய படங்களில் அவர் அதிகம் நடித்ததால் அந்த ரசிகர்களுக்கு ஏற்றாவாறு கவர்ச்சியை கொஞ்சம் குறைத்துக்கொண்டார். அடுத்து, தான் இனி முத்தக்காட்சியில் நடிக்கப்போவதில்லை என்பது போன்ற பரபரப்பு அறிவிப்பையும் வெளியிட்டார். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதால், ரசிகர்கள் அவரை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளார். தமன்னா, பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்தினை வைத்துக்கொண்டு இப்போது ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்வது சரியா என பலர் கேள்வியெழுப்பி உள்ளனர். 

பிரபல நடிகருடன் காதல்..

நடிகை தமன்னா, பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாக பல நாட்களுக்கு முன்பிருந்தே வதந்திகள் பரவியது. சமீபத்தில் தமன்னா கலந்து கொண்டே நேர்காணில் இந்த வதந்திகளை உறுதி செய்வது போல பேசினார் தமன்னா. இதையடுத்து, இவருக்கும் விஜய் வர்மாவிற்குமான தொடர்பை ரசிகர்கள் உறுதி செய்தனர். இவருடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற ஆந்தாலஜி படத்திலும் தமன்னா நடித்துள்ளார். அதில், பெண்கள் பேசவே கூடாத டாபிக்காக வைத்திருக்கும் செக்ஸைத்தான் அடிப்படையாக கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது. இதில் கஜோல், மிருணாள் தாகூர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நடிகை தமன்னா, தனது காதலர் விஜய் வர்மாவிற்கே ஜோடியாக நடிக்கிறார். 

இந்த தொடரிலும் கவர்ச்சி..

நடிகை தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். அவர், இந்த படத்திலும் அறைகுறை புடவையில் கவர்ச்சயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலர் இவரை தொடர்ந்து விமர்சனம் செய்தாலும் அவர்கள் ஓரக்கண்களால் இவரை ரசிப்பதும் உண்டு. இந்த படத்தின் முதல் பாகத்தில் பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களான கியாரா அத்வானி, விக்கி கெளஷல் ஆகியோரும் நடித்திருந்தனர். 

மேலும் படிக்க | 36 வயதில் அடிக்கும் ஜாக்பாட்..! சமந்தா காட்டில் பணமழை..! பொறாமையில் முன்னணி நடிகைகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News