Tamil Serial Nenjathai Killathe Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மதுமிதாவுக்கு நிச்சயம் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மதுமிதா கௌதம் ரூமுக்குள் உட்கார்ந்து அங்கிருக்கும் போட்டோக்களை பார்த்து கொண்டிருக்க கௌதம், சந்தோஷ் மற்றும் சந்தோஷ் மனைவி ஆகியோர் உள்ளே நுழைகின்றனர். உடனே மதுமிதா போட்டோவை தவறுதலாக இடம் மாற்றி வைத்து விடுகிறாள்.
இதை பார்த்த கௌதம் போட்டோவை இருந்த இடத்தில வைக்க சொல்லி சத்தம் போட மதுமிதா இதெல்லாம் இப்படி கோவப்படுறாரே என்று பீல் பண்ணுகிறாள். அடுத்து அவன் படித்த புத்தகங்களையும் எடுத்து பார்த்து தவறாக வைத்து விட அதுக்கும் சத்தம் போடுகிறான்.
மறுபக்கம் மாயா பார்ட்டியில் நண்பர்களுடன் டான்ஸ் ஆடி கொண்டிருக்க அப்போது அவளது தோழிகள் உன்னுடைய பாய் பிரண்ட் ஜீவா வரலையா? அவன் மிடில் கிளாஸ் என்பதால் இதுக்கெல்லாம் வர பயப்படுறானா என்று கேள்வி கேட்டு கலாய்க்கின்றனர்.
இதனால் மாயா பி.ஏ-விடம் ஜீவாவுக்கு போன் செய்து இப்பவே வர சொல்லு என்று சொல்ல பி.ஏ ஜீவாவுக்கு போன் செய்து மாயாவுக்கு ஆக்சிடென்ட் என்று சொல்ல அவன் பதறியடித்து ஓடி வருகிறான். அப்போது மாயா டான்ஸ் ஆடி கொண்டிருப்பதை பார்த்து டென்ஷனாகி அவளை அறைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க - ரம்யாவை அறைந்த கார்த்திக்.. பரபரப்பில் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ