‘தளபதி 63’ படத்தின் பெயர் & பஸ்ர்ட் லுக் வெளியிடப்பட்டது

‘தளபதி 63’ படத்தின் அப்டேட் வெளியானது; கொண்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 21, 2019, 06:58 PM IST
‘தளபதி 63’ படத்தின் பெயர் & பஸ்ர்ட் லுக் வெளியிடப்பட்டது title=

தளபதி விஜய்-யை வைத்து பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்குநர் அட்லீ இயக்கி வரும் படத்தின் பெயர் மற்றும் பஸ்ர்ட் லுக் போஸ்டர் குறித்து இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும், செகண்ட் லுக் போஸ்டர் இரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தநிலையில், தர்போத்ஹு ‘தளபதி 63’ படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. படத்தின் பெயர் "பிகில்"

 

ஏற்கனவே ட்விட்டரில் #Thalapathy63FLDay என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால், சமூக வலைதளங்களில் தெறிக்க விட தயாராகி வருகின்றனர். 

கடந்த வருடம் இதே நாளில் தான் விஜய்யின் சர்கார் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, 

Trending News