தளபதி 66க்கு Music- மவுனம் கலைத்த இசையமைப்பாளர் தமன்

தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2021, 10:58 AM IST
தளபதி 66க்கு Music- மவுனம் கலைத்த இசையமைப்பாளர் தமன் title=

தமன் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக நடித்தார். இதன்மூலமாக திரைப்படங்களில் இசையமைக்க தமனுக்கு (S Thaman) வாய்ப்பு கிடைத்தது. 

ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

சிந்தனை செய் திரைப்படம் இவர் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். பின்னர் கிக் திரைப்படம் இவரது இசையமைப்பில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமாகும். தொடர்ச்சியாக அற்புதமாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் நேற்று ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இசையமைப்பாளர் தமன் பதில் அளித்துள்ளார். அதன்படி அதில் ஒரு தல அஜித் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அஜித்துடன் வேலை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நபர் என்றும் தெரிவித்து உள்ளார். 

அதேபோல் தளபதி விஜய் (Actor Vijay) ரசிகரும் கேள்வி ஒன்று கேட்டு உள்ளார், அதில், தளபதி 66க்கு இசை நீங்களா என்றார். அதற்கு பதில் அளித்த அவர்., Finger Crossed என கூறியுள்ளார். 

 

 

 

இதன் மூலம் தமன் விஜய்யின் அடுத்த படத்திற்கு இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கூடும் என்று தெரிகிறது. 

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இப்படத்தினை இயக்க அனிருத் இசையமைக்கிறார்.  கதாநாயகியாக பூஜா ஹெக்டே, வில்லனாக செல்வராகவன் போன்றோர் நடிக்கின்றனர். இதற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News