வெளியானது சத்யா திரைபடத்தின் இசை!

Updated: Sep 6, 2017, 06:16 PM IST
வெளியானது சத்யா திரைபடத்தின் இசை!
Pic Courtesy: Twitter

நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு சிபிராஜ் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "சத்யா". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று தனியார் பண்பலை நிலையம் ஒன்றில் இன்று மாலை சத்யா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

 

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த்ராஜ், யோகி பாபு, மெரினா சதிஷ், ரவி வர்மா மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரில்லர் திரைப்படம் "சத்யா". 

க்ஷணம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைதுள்ளார்.